சுப்பலெஷ்மி லெஷ்மிபதி அறிவியல் கல்லூரியில் 20.11.2017 அன்று மூன்றாமாண்டு மாணவர்களுக்கான எதிர்கால வாழ்வியல் ஆலோசனை கருத்தரங்கம் (Career Couselling )நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் டாக்டர் பி.சரவணன் அவர்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு மென் திறன்களான பக்தி, மனதை ஒருநிலைப்படுத்துதல், ஆளுமைத்திறன் மொழிப்பயன்பாடு ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால் அவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமது வாழ்த்துரையில் கூறினார். சிறப்பு விருந்தினர் டாக்டர் D.P.N பிரசாந்த் (Educational Management and Strategy Consultant) அவர்கள் மாணவர்களுக்கு குறிக்கோள் வேண்டும். அக்குறிக்கோளை அடைவதற்கு என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமது சிறப்புரையில் கூறினார். தங்கமயில் ஜுவல்லரி தலைமை பொறுப்பு அதிகாரி திரு.ஏ.விஷ்வ நாரயணன் அவர்கள் மாணவர்களின் இலட்சிய கனவுகள் வெற்றி அடைவதற்கு உழைக்க வேண்டும். அவற்றோடு மொழி அறிவு திறனை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமது உரையில் கூறனார். துணை முதல்வர் திரு.மு.அர்ச்சுனன் அவர்கள் கலந்து கொண்டார்.