சுப்புலெட்சுமி லெட்சுபதி அறிவியல்‌ கல்லூரியில்‌ அனிமேஷன்துறை சார்பாக19.02.2018 திங்கட்கிழமை தொடங்கி இரண்டு நாட்களுக்கு களிமண்ணில்‌ சுடுமண்‌சிற்பம்‌ செதுக்கும்‌ பயிற்சிப்பட்டறை நடைபெற்று வருகிறது. துவக்க விழாவில்‌துறைத்தலைவர்‌ திரு.P.திருநாவுக்கரசு வரவேற்புரை நல்கினார்‌. கல்லூரிதுணைமுதல்வர்‌ திரு.அர்ச்சுனன்‌ அவர்கள்‌ தலைமையுரை ஆற்றினார்‌.சிற்பத்துறை வல்லுநர்கள்‌ திரு.S.திஷாந்த்‌, திரு.M.செல்வம்‌, மற்றும்‌ திரு.P .ராமராஜன்‌ ஆகியோர்‌ சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டூ அனிமேஷன்‌துறை மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்‌. அனிமேஷன்‌ துறை பேராசிரியர்‌திரு.V.செந்தில்குமார்‌ நன்றியுரையாற்றினார்‌.